பு. ஜார்ஜ்


சங்கநூற் புலவர்கள் பெயர் அகராதி என்ற ஒன்றை வையாபுரிப்பிள்ளை தயாரித்துள்ளார். இது முதன்முதலாக 1933ஆம் ஆண்டின் இறுதியில் தூத்துக்குடி சைவசித்தாந்த சபையினரால் வெளியிடப்பட்ட பொன்மலர்க் கட்டுரையில் இடம்பெற்றது. பின்னர் 1934ஆம் ஆண்டில் சமாஜம் பதிப்பாக வெளியிடப்-பட்டது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த பலரின் வேண்டுகோளுக்கு இனங்க, சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) சமாஜப் பதிப்-பாக 1940ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
 இப்பதிப்பு, திருத்தமாகவும் செவ்விய முறையிலும் வெளிவருவதற்குரிய வேலை தொடங்கி இன்றைக்கு ஏழாண்டுகள் ஆகின்றன. என்று 13_4_1940இல் ம. பாலசுப்பிரமணியன் இப்பதிப்பின் முகவுரையில் குறிப்பிட்டதன் மூலம் சங்க நூற்புலவர்கள் பெயர் அகராதி வெளிவந்தவுடனேயே இவ்வேலை ஆரம்பிக்கப்-பட்டாயிற்று என்பது தெளிவாகிறது. சங்க இலக்கிய சமாஜப் பதிப்புக்கு வையாபுரிப்பிள்ளை பதிப்பாசிரியர் என்பது முகப்பில் குறிப்பிடப்பட-வில்லை. ஆனால், அப்பதிப்புக்கு ம.பாலசுப்பிர-மணியன் (காரியதரிசி, சைவசித்தாந்த மகா-சமாஜம்) எழுதியுள்ள முகவுரையில் அப்பதிப்புக்-குப் பலர் உதவியதாகக் குறிப்பிட்டு,
‘நிரம்பிய அடக்கமுடைய இவர்கள் விருப்பத்துக்கிணங்க இவர்கள் பெயர்களெல்-லாம் விவரமாகக் கொடுக்கப்படவில்லை. இவர்களுள் முக்கியமான ஒருவரை மட்டும் குறிக்காமல் விடுவது அறமாகாது. சென்னைப் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழாசிரியரும், ஏட்டுப்பிரதிகளைப் பரிசோதிப்பதில் சிறந்த நிபுணரும், சங்க நூல்களில் முப்பது வருஷ காலமாகப் பயிற்சியுடையவரும், சமாஜ வெளியீடுகள் பலவற்றிற்கும் பிரதிகளைச் சேகரித்து ஒப்புநோக்கிப் பலவழிகளிலும் துணைபுரிந்தவரும் எனது நண்பருமாகிய சைவத்திருவாளர் _ ராவ்சாஹிப் _ எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்கள் இவ்வெளியீட்-டுக்காக இயற்றிய தொண்டு அளவிடற்பால-தன்று. இப்பதிப்புக்கு இவர்களே பதிப்பாசிரியர் என்று சொல்லக்கூடிய அளவிற் பேருதவி செய்துள்ளார்கள்’
என்கிறார். மேலும், இச்சங்க இலக்கியப்பதிப்பு இரண்டாம் பதிப்பாக பாரி நிலையத்தாரால் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இவ்-விரண்டாம் பதிப்பிலுள்ள க. அ. செல்லப்பனின் நன்றியுரையில்,
‘காலஞ்சென்ற பெருமதிப்பிற்குரிய தமிழ்ப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளையவர்கள், சைவத்திருவாளர் ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் ஆகியோரின் இடையறா உழைப்பி-னால் உருப்பெற்றது இப்பெருநூல்’ 
என்று கூறியுள்ளார். இவ்விரண்டாம் பதிப்புக்கு முகவுரை எழுதியுள்ள மு.சண்முகம் பிள்ளை, ‘காலஞ் சென்ற, தமிழ்ப்பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்களைப் பதிப்பாசிரியராகக் கொண்ட அறிஞர் கழகம் ஒன்று அரிதின் முயன்று அப்பதிப்பினை உருவாக்கி அளித்தது’
என்று கூறுகிறார். அதோடு மட்டுமல்லாமல் இவ்விரண்டாம் பதிப்பில், ‘தொகுப்பும் பதிப்பும் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை’ எனத் தெளிவாக முன்பக்கங்களிலேயே குறித்திருக்-கிறார். இவற்றையெல்லாம் நோக்கும்போது இச்சங்க இலக்கியப்பதிப்பின் பதிப்பாசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையே என்பது தெளிவாகிறது. இப்பதிப்புக்காக வையாபுரிப்பிள்ளை தயாரித்த குறிப்புகள் நேரடித் தரவாக அமைந்து இதனை உறுதிப்படுத்துகின்றன. (இவை வையாபுரிப்-பிள்ளையின் மகளார் வை.சரோஜினியார் குடும்பத்தாரால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.) எருமணம் எனும் கட்டுரையன்றை வையாபுரிப்பிள்ளை எழுதியுள்ளார். அதில், குறுந்தொகையின் 113 _ஆம் செய்யுளை இயற்றிய ஆசிரியர் பலரால் பலவகையாகச் சுட்டப்பட்-டுள்ளமையை எடுத்துக்காட்டி, இப்புலவர் அச்செய்யுளிலே பொய்கை, ஆறு என்பன-வற்றைச் சிறப்பித்துச் சொல்வதால் மாதீர்த்தன் என்பதுவே உண்மைப் பெயராதல் வேண்டு-மெனக் கூறி, “இப்-பெயரையே யான் பதிப்-பித்த சங்க இலக்கியத்தில் ஆண்டுள்ளேன்’’ என்கி-றார். இதனாலும் சங்க இலக்கியப்பதிப்பு வையா-புரிப்பிள்ளையால் செய்யப்-பட்டது என்பது உறுதி-யடைகிறது.
சங்க இலக்கியங்கள் என்பன எவை என்பது குறித்த வையாபுரிப்பிள்ளையின் கருத்தை அறிந்து கொள்ளுதல் இங்கு அவசியம். சங்க நூற்புலவர்கள் பெயர் அகராதியின் முன்னுரை-யில் வையாபுரிப்பிள்ளை,
‘சங்க நூல்கள் என்று பொதுவாகக் கூறப்படுவன எட்டுத்தொகையாகிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் எட்டுத்தொகை நூல்கள். பத்துப்பாட்டாகிய திருமுருகாற்றுப்படை முதல் மலைபடுகடாம் ஈறாகவுள்ள பத்துப்பாட்டுக்கள், சங்கம் மருவிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகிய திருக்குறள், நாலடியார் முதலிய பதினெட்டு நூல்கள், ஐம்பெருங் காப்பியங்-களாகிய சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் ஐந்து காவியங்கள் ஆகிய இவைகளே. இவைகளைத் தவிர, தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும் உள்ளன. இந்நூல்கள் அனைத்தையும் இயற்றிய ஆசிரியன்மார் பெயர்களை ஒருங்கே தொகுத்துக் கூறுவதும் இவ்வகராதியின் நோக்கமன்று.
மேற்கூறியவற்றுள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்-கீழ்க்கணக்கு என்ற தொகைகளிற் காணப்-படும் ஆசிரியன்மார் பெயர்களை மட்டும் அகராதி வரிசைப்படுத்தி ஒவ்வொரு புலவரும் இன்ன இன்ன நூல்களில் இன்ன இன்ன பாடல்-களைப் பாடியுள்ளார் என்பதைக் குறிப்பதே இங்கு மேற்கொண்ட நோக்கமாகும்’ என்கிறார். இவ்வாறு சங்க நூற்புலவர்கள் பெயர் அகராதியில் கீழ்க்கணக்கு நூற்புலவர்களும் தரப்பட்டுள்-ளதால் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் சங்க நூல்களே என வையாபுரிப்பிள்ளை (1933) கருதியிருந்தார் என்பது தெளிவாகிறது. தொடக்கக் காலத்தில் இவ்வகைக் கருத்தாக்-கத்தைக் கொண்டிருந்த வையாபுரிப்பிள்ளை பிற்காலங்களில், எட்டுத் தொகையும் பத்துப்-பாட்டுமே சங்க இலக்கியம் என்ற கருத்துக்கு வந்துவிடுகிறார். 1947இல் முதற்பதிப்பாக வந்துள்ள அவரது ‘இலக்கியச்சிந்தனை’ என்னும் நூலில் ‘சங்க இலக்கியங்கள்’ எனும் தலைப்பில் இரு கட்டுரைகள் அமைந்துள்ளன. அவற்றில் முதல் கட்டுரையில்,
‘சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என இருபெருந் தொகுதிகளாக அமைந்துள்ளன’ என்று கூறி ஞாபகச் செய்யுட்களைக் காட்டி அவை இன்ன இன்ன என விளக்கிச் செல்கிறார். இக்கட்டுரையானது சங்கநூற்புலவர்கள் பெயரகராதி, சங்க இலக்கியம் ஆகியன வெளிவந்த பின்னரே வந்திருக்கிறது.
28.2.1941இல் திருச்சி வானொலி நிலையத்தில் பேசப்பட்டு, பின்னர் ‘கலைமகள்’ பத்திரிகையின் தொகுதி 19இல் (1941) இக்கட்டுரை வெளியாகி-யுள்ளது. 1944இல் ‘திரிகடுகமும் சிறுபஞ்சமூல-மும்’ பதிப்புக்கு வையாபுரிப்பிள்ளை எழுதியுள்ள முன்னுரை 1957இல் வெளிவந்த ‘இலக்கிய மணிமாலை’ எனும் அவரது கட்டுரைத்தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ளது. தொடக்கப்பகுதி மட்டும் சிறிது மாற்றம் பெற்றுள்ளது. மாற்றம்பெற்ற அப்பகுதியில்,
‘சங்க காலத்துத் தொகைநூல்களை அடுத்து மிகப் பிரசித்தமாய் வழங்குவது ‘பதினெண்-கீழ்க்கணக்கு’ என்னும் நூல் தொகுதியேயாம்’  எனத் தொடங்குகிறார். பாட்டும் தொகையும் மட்டுமே சங்க இலக்கியம் என்னும் இக்கருத்தே சங்க இலக்கியம் எனப் பெயர்பெற்ற பாட்டும் தொகையும் பதிப்பிலும் பின்பற்றப்பட்டுள்ளது. சமாஜப்பதிப்பின் முகவுரையில் ம.பாலசுப்பிர-மணியன் (இம்முகவுரையை வையாபுரிப்பிள்ளை சமாஜத்துக்காக எழுதியிருக்க வேண்டும் என்பது நடையளவில் தெளிவாகுகிறது*) பின்வருமாறு கூறியுள்ளார்.
‘இப்பதிப்புக்குச் சங்க இலக்கியம் என்ற பெயர் பொருந்துமா என்பது நோக்குதற்குரியது. பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியத்தின் பாற்பட்டவை என்பதை எவரும் மறுக்க இயலாது. சிலப்பதிகாரம், பதினெண்-கீழ்க்கணக்கு முதலியவைகட்குச் 21சங்க இலக்கியம் என்ற பெயர் பொருந்து-வதைப் பற்றிப் பலவகையான கருத்து வேற்றுமை-களுண்டு. தொல்காப்பியவுரையுள், பேராசிரியர் மரபியல் 94_ம் சூத்திர உரையிலும், நச்சினார்க்-கினியர் அகத்திணையியல் 6_ம் சூத்திர உரையி-லும் புறத்திணையியல் 26_ம் சூத்திர வுரையிலும் கூறுவனவற்றிலிருந்து எட்டுத் தொகையும் பத்துப்பாட்டுமே சங்க இலக்கியமெனக் கருதப்பட்டன என்பது தெளிவாகலாம். வேற்று-மையின்றி அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய பகுதிக்கே சங்க இலக்கியம் என்ற பெயரை-யிடுதல் பொருந்தும். இதனினும் சிறந்த பெயர் இப்பதிப்புக்குக் காணுதல் இயலாது.’
இக்கூற்று சங்க இலக்கியம் என்பது பத்துப்-பாட்டும் எட்டுத்தொகையுமே என்பதை வலியுறுத்துகிறது.
வையாபுரிப்பிள்ளையின் சங்கஇலக்கியப் பதிப்பின் தன்மைகளை முகவுரை பின்வருமாறு விளக்குகிறது.
‘இப்பதிப்பை ஆராய்ச்சிக்கு ஓரளவு எளிய வசதி அளிக்கும் குறிப்பு நூலாகக் கொள்ள வேண்டுமேயழிய, எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் மூலமும் உரையுமாக வெளிவந்-துள்ள அருமையான பதிப்புகளுக்குப் பதில் இதை எவரும் கனவிலும் எண்ணி ஏமாற்ற-மடைதல் கூடாது. அப்பதிப்புகளிலுள்ள உரை, விஷய அகராதி, பிரதி பேதங்கள், பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு முதலியன இப்பதிப்பில் இல்லை. உவர்நீர் அருந்தினால் தாகம் மிகும் என்பதையப்ப, இப் பதிப்பைப் பயிலுதல் அப் பதிப்புகளைப் பயன்படுத்தும் வேட்கையைத் தோற்றிப் பெருக்குமென்பதில் ஐயமில்லை. அவ்வரிய பதிப்புகளைப் பயின்றபின் அவற்றுள் காணப்படும் நூற்பொருட்களை எளிதில் நோக்கி உணர்தற்குரிய கருவி நூலாக-வும் இப்பதிப்பு பயன்படுதல் கூடுமென்று நம்புவதற்கிடமுண்டு. ஒரு புலவர் பாடிய பாடல்-களையெல்லாம் ஒரு சேரப் படிக்கக்கூடிய வசதியே இப்பதிப்பிற் சிறப்பாகக் கிடைப்பது. ஒரு புலவருடைய வாக்கின் திறமை, செய்யுளின் வெற்றி, பொருட்செறிவு, சரிதச்சான்று முதலியவற்றை ஆராய்ந்தறிய விரும்புவோர் அவர் பாடல்களனைத்தையும் ஓரிடத்தே படித்துப் பயன்பெற விரும்புவரேயன்றி ஒன்பது நூல்களைப் புரட்டிப் புரட்டி ஒவ்வொன்றிலும் வேண்டுவனவற்றைப் பொறுக்கியெடுக்கும் சிரமத்தை மேற்கொள்ளச் சிறிதும் விரும்பார். தொகைநூல்கள் ஒவ்வொன்றனுள்ளும் குறித்த எண்களுடைய பாடல்களை எளிதில் எடுக்கக்-கூடிய வசதியும் இப்பதிப்பிலுண்டு. இப்பதிப்பின் இறுதியிலுள்ள பல அட்டவணைகளும் அகராதி-களும் ஆராய்ச்சியாளர்கட்கும் பயன் தருவனவாகும்.’
இங்கே ஓர் செய்தியைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டுவதும் அவசியமாகிறது. தேவைக்கதிகமான அடக்கத்தை இம்முகவுரை கொண்டிருக்கிறது. தாம் பதிப்பித்த நூலை மீண்டும் பதிப்போருக்கு நரக தண்டனை விதிக்கப்படும் என்று உ.வே.சாமிநாதையர் கூறி வந்ததும் இதற்குக் காரணம் எனலாம். உ. வே. சா. வை மையமாகக் கொண்டே மேற்குறிப்பிட்ட செய்திகள் அமைந்திருக்கின்றமை நோக்கின் சாதாரணமாய்ப் புலப்படும்.
இப்பதிப்பு உருவான முறையைக் குறித்து இனி அறியலாம். தமிழகத்தில் மட்டுமல்லாது சரவண பெலகொளா என்ற கன்னட தேசத்துக்-கும், சமாஜத்தினர் ஏடுகள் தேடிச் சென்றுள்-ளனர். பல இடங்களில் கிடைத்த பிரதிகளின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. நூலின் பெயர், நூல் ஏட்டுப்பிரதியா? கடிதப் பிரதியா? முழுப்பிரதியா குறைப்பிரதியா? குறைப்பிரதிகளில் எதிலிருந்து எதுவரை? பிரதிக்குரியவர் யார்? அல்லது எந்த நூல் நிலையத்துக்குச் சொந்தமானது அல்லது எந்த மடாலயத்துக்குச் சொந்தமானது? பூர்த்தி-யானதா? சிதிலமடைந்ததா? சிறந்ததா? உரையுடன் கூடியதா? மூலம் மட்டுமா? போன்ற விவரங்களுடன், அவ்வட்டவணை அமைந்துள்-ளது. அட்டவணையின் அமைப்பு வருமாறு அமைந்துள்ளது:
நூல்    ஏடுஅல்லது உரியவர் குறிப்பு கடிதம்
1. அகநானூறு ஏடு கம்பர் விலாசம், வே. இராஜ கோபாலையங்கார் நல்லநிலையிலுள்ளது
இப்பதிப்பை அச்சிடத் தொடங்குமுன் பிரதிகளை ஒப்பிட்டு நோக்கி உண்மைப் பாடத்தைத் தேர்ந்தெடுப்பதற்குக் கையாளப்-பட்ட முறைகள் மூவகைப்படும்.
‘1. உரையின்றி நூல்களின் மூலமட்டுங் கிடைக்குமிடத்து, பிரதிகளிலுள்ள மூலத்தால் மட்டும் திருத்தம் செய்தல்
2. உரைகளுள்ளவிடத்து அவைகளின் துணைகொண்டு பிரதிகளிலுள்ள மூலத்தை நோக்கிப் பொருத்தமுள்ள பாடங்கொள்ளுதல்
3. தொல்காப்பிய உரை முதலியவற்றில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டவிடத்து, அவ்வுரையிற்காணும் பாடத்தோடு ஒப்புநோக்கித் தகுதியான பாடங்கொள்ளுதல். இம்முறைகளாற் கிடைத்த திருத்தங்களும் பலவகைப்படும். ஓரோவிடத்து அச்சுப்பிரதிகளிற் காணப்படாது மறைந்துவிட்ட அடிகள் மீண்டும் கிடைத்தன. ஒரு சிலவிடங்களில் அப்பிரதிகளிற் காணப்-படாது மறைந்துவிட்ட சொற்கள் புலப்பட்டன. ஒரு சிலவிடங்களில் அப்பிரதிகளில் மாறுபட்டுக் காணும் சொற்கள் திருத்தமடைந்தன. ஒரு சிலவிடங்களில் இலக்கணக்குறிப்பு, பாடினோர், பாடப்பட்டோர் குறிப்பு முதலியவற்றில் திருத்தங்கள் கிடைத்தன. ஒரு சிலவிடங்களில் அடிவரையறை செம்மையாக அமைந்தது. இவைகளேயன்றி, பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்-தென்று ஓரளவு ஊகித்தற்குரிய பாட்டொன்-றும், பரிபாடலைச் சார்ந்ததென்று ஐயுறக்கூடிய பாடற் பகுதியன்றும் புதியனவாகக் கிடைத்துள்ளன’ (முகவுரை வீஜ்)
என்றும், பாட வேறுபாடுகளையெல்லாம் தொகுத்து இப்பதிப்பில் அட்டவணையாக வெளியிட எண்ணியிருந்தாலும் ஏராளமான பாட வேறுபாடுகள் இருந்தால் பதிப்பின் அளவு மிகப் பெருகிவரும் என்பதாலும் அப்படிப் பெருகுவதால் தக்க பயன் இல்லை என்பதாலும் அட்டவணை வெளியிடப்படவில்லை என்றும் முகவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில்,
“பாடிய புலவர்களின் பெயரைப் பற்றிய பாடபேதங்களும், ஒரே பாடலை வெவ்வேறு புலவர்கள் பாடியதாகக் காணப்படும் பிரதி பேதங்களும், சங்கநூற் புலவர்கள் பெயரகராதி என்ற நமது வெளியீட்டில் உள்ளன. அக்-காரணம் பற்றி அவை மீண்டும் இப்பதிப்பில் வெளியிடப்படவில்லை. அவ்வெளியீட்டின் பின்னர் செய்யப்பெற்ற பரிசோதனையால் அதிற் பிழையெனக் காணப்பட்டவை இப்பதிப்பில் திருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு பற்பல வழிகளில் முயன்று நூற்றுக்-கணக்கான இடங்களில் செப்பஞ் செய்யப்பெற்ற மூலமே இப்பதிப்பில் தரப்பட்டுள்ளது. இவ்வளவு முயற்சி செய்தும் பொருள் விளங்காத பகுதிகள் பலவுள்ளன. அப்பகுதிகளிற் பாடம் சிதைந்துள்ளதென்பது எளிதில் அறியக் கிடக்கின்றது. பாடம் இவ்வாறிருத்தல் வேண்டு-மென்று ஊகிக்கவும் இடமுண்டு. ஊகங்கள் உண்மையெனத் துணிந்தவிடத்தும், அவை இப்பதிப்பிற் பிழைத் திருத்தமாக உடுக்குறியுடன் கொடுக்கப்பட்டுள்ளனவேயன்றி மூலங்கள் திருத்தப்படவில்லை. பிரதிகளின் உதவியின்றிக் கேவலம் ஊகத்தையே கடைப்பிடித்துப் பாடங்களை மாற்றிவிடுதல் அடாத காரியம். இப்பதிப்பில் ஒரு பாடமேனும் ஊகத்தால் மாற்றப்படவில்லை. விளங்காத பாடங்கள் திருந்துதற்குரிய வழி ஒன்றேயுள்ளது. அது பெரு முயற்சிகள் செய்து மேன்மேலும் ஏட்டுப்-பிரதிகளைத் தேடிச் சேகரித்து அவற்றின் துணை-கொண்டு ஆராய்ந்து உண்மை காணுவதே.
இனி இப்பதிப்பின் அமைப்பு, வரிசைக்கிரமம் முதலியவற்றைச் சிறிது விளக்குதல் நலமாகும். புலவர் பெயர்கள் அகரவரிசையில் வைக்கப்பட்-டுள்ளன. புலவருடைய பாடல்களும் அக-நானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, பரிபாடல், புறநானூறு என்ற நூல்முறையில் அமைந்துள்ளன. அவற்றுள் ஒவ்வொன்றிலு-முள்ள பாடல்கள் அதில் அவை பெற்றுள்ள எண் வரிசையிலுள்ளன. உதாரணமாக அம்-மூவனார் பாடல்களை எடுத்துக்கொள்வோம். இவர் புலவர் வரிசையில் பத்தாவது இடம் பெற்றுள்ளார். இவர் பாடல்கள் அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நான்கு தொகைகளில் மட்டும் கிடைக்கின்றன. இப்பதிப்பில் இவர் அகநானூற்றுள் பாடியவை-யனைத்தும் முதலில் தரப்பட்டுள்ளன. அப்-பாடல்கள் ஆறும் அவை அகநானூற்றில் பெற்-றுள்ள (10, 35, 140, 280, 370, 390) எண் முறையி-லேயே இப்பதிப்பில் 16 முதல் 21 உள்ளிட்ட எண்களோடு அச்சிடப்பட்டுள்ளன. பிறகு இவர் குறுந்தொகையிலும் நற்றிணையிலும் பாடியவை மேற்கூறிய வரிசைக் கிரமத்தில் கொடுக்கப்பட்-டுள்ளன. இவ்வாறு இப்பதிப்பு அமைந்துள்ள-படியால் தொகையிலும் பாட்டிலுமுள்ள எந்தப் பாடலையும் எளிதாக எடுத்துவிடலாம்.
‘இந்நூலிற்காணும் புலவர்களின் பெயர்களுள் சிலவற்றில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாகக் கதப்பிள்ளை, கதப்பிள்ளையார், கருவூர்க் கதப்பிள்ளை, கருவூர்க்கதப்பிள்ளைச் சாத்தனார், கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் என்று ஐவகைப் பெயர்கள் உள்ளன. இவற்றாற் குறிக்கப்படும் புலவர் ஒருவரா இருவரா பலரா என்பது ஐயத்திற்கிடமின்றித் தெளியக்கூட-வில்லை. புறநானூற்றுப் பதிப்பாசிரியர் இப்பெயர்கள் தந்தையும் மைந்தனுமாகிய இருவரைக் குறிக்குமென்கிறார்; நற்றிணைப் பதிப்பாசிரியர் இவையனைத்தும் ஒருவரையே குறிக்குமென்கிறார். நமது பதிப்பில் இப்பெயர்கள் கதப்பிள்ளையார், கருவூர்க்கதப்பிள்ளைச் சாத்தனார் என இரு புலவர்களைக் குறிப்பன-வாகக் கொண்டு பிரதிகளின் சான்றால் சில பாடல்கள் ஒருவருக்கும் ஏனையவை மற்றவர்க்-கும் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து நற்றிணைப் பதிப்பாசிரியர் கொள்கை தவறென்று இப்பதிப்பு முடிவுகட்டி விட்டதாக எவரும் நினைத்த-லாகாது. இவ்வாறே நக்கீரர், கந்தரனத்தனார் முதலிய பல பெயர்கட்கும் கொள்க. இப்பதிப்பில் ஒரு புலவருடைய பாடல்களாகத் தரப்பட்டவை இருவர் அல்லது மூவர் பாடல்களாகவும் இருத்-தல் கூடும். பாடல்களிலுள்ள அகச்சான்றுகளின் துணைகொண்டும் சங்க நூற்புலவர்கள் பெயர் அகராதியின் துணைகொண்டும், மூலமும் உரையுமாக வெளிவந்துள்ள தொகை நூல்களின் துணை கொண்டும், அவற்றிற் காணப்படும் பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு முதலியவற்றின் துணைகொண்டும் உண்மை வண்ணம் காண்பதே அறிவுடைமையாகும். இவ்வாராய்ச்சிக்கு ஒரு சிறு கருவியாக உதவும் அளவிலேயே இப்பதிப்பு அமைந்துள்ளதென்-பதை வற்புறுத்துவது நலமெனத் தோன்றுகிறது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப் பல வகையிலும் சிறந்திலங்கும் இப்பதிப்பின் சிறப்பியல்புகளை விவரிக்கும் முறையிலேயே தொடக்கத்தில் குறிப்பிட்ட தேவைக்கதிகமான  அடக்கம் என்பதன் அர்த்தம் பரிணமிக்கிறது.
இச்சங்க இலக்கியப் பதிப்பின் இரண்டாம் பதிப்பு* பாரி நிலைய வெளியீடாக வந்துள்ளது. இதில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை குறித்து வையாபுரிப்பிள்ளையின் மாணவர் மு. சண்முகம்பிள்ளை அப்பதிப்பின் முகவுரையில்,
‘இந்த இரண்டாம் பதிப்பு முந்திய பதிப்புப் போலவே பாடங்களில் மாறுதலின்றி அச்சிடப்-பட்டுள்ளது. ஆயினும், அமைப்பு முறையில் ஒரு சில மாறுதல்கள் செய்யப் பெற்றுள்ளன. பக்கத் தலைப்புகளில் இடப்பக்கம் (இரட்டை எண்) முதலில் இடம்பெறும் புலவர் பெயரும், வலப்-பக்கம் (ஒற்றை எண்) முடிவுறும் இடத்து அமைந்த புலவர் பெயருமாக அமைக்கப் பெற்றுள்ளன. இவற்றால் பக்கங்களைத் திருப்-பியவுடன் தானே, அவற்றில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களைக் கண்டு கொள்ளுதல் எளிதாகும். மற்றொன்று பாடல் அடிகளின் முதலில் ஐந்து அடிகளுக்கு ஒரு முறை அமைக்கப் பெற்றிருந்த அடி எண்கள். இவை இப்பொழுது முடிவிடங்களுக்கு எதிராக மாற்றித் தரப்பட்டுள்ளன. பாடல்களின் அமைப்பு சற்றுக் கவர்ச்சிகரமாகத் தோற்றமளிக்கும் என்னும் கருத்தால் இவ்வடி எண்கள் இடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சிற்சில பாடல்-களின் எண் தொடர்ச்சிக்காக இடம் பெற்றிருந்த ஆங்கில எழுத்துகளுக்குப் பதில் தமிழ் எழுத்துகள் இடப்பட்டுள்ளன. பாட்டு முதற்-குறிப்பகராதி முந்திய பதிப்பில் மூன்று பத்தியாகத் தரப்பட்-டிருந்தது. இதனால் முதற்குறிப்புச் சொற்கள் குறைவுபட்டுப் பொருள் தெளிவின்றிக் காணப்-பெற்றன. இப்பொழுதே இரண்டு பத்தியாகக் கொடுத்து அக்குறைவும் நிறைவு செய்யப் பெற்றிருக்கிறது. இதனால் சில பக்கங்கள் இப்பதிப்பில் அதிகமாயின.
முதற்பதிப்பில் நூலிறுதியிலே கொடுக்கப்பட்-டிருந்த ஆராய்ச்சிக்குறிப்புகள் அனைத்தும் இப்பதிப்பிலும் உண்டு. சங்க இலக்கியம் பாடல் தொகை (ப. 1369) ஒரு புதிய இணைப்பு. அடுத்துச் சங்க இலக்கியங்களின் வரலாறு முதலியன கூறும் பகுதியில், ‘பத்துப்பாட்டைக் குறித்து முன்பு வழங்கும் ‘முருகு பொருநாறு’ என்னும் பாடலோடு பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களால் பிரதிகளில் கண்டு பின்னர்த் தெரிவிக்கப்பட்ட வேறு இரண்டு பாடல்கள் இதில் இணைக்கப்பட்-டிருக்கின்றன (பக்கம். 1373). மேலும், பாடபேதக் குறிப்புகள், ஒப்புமைப்பகுதிகள், அருஞ்சொற்-பொருளகராதி முதலியனவும் இப்பகுதியில் சேர்க்கக் கருதியதுண்டு. எனினும் நூலின் விரிவஞ்சி அவற்றை மற்றொரு தனி இணைப்புத் தொகுதியாகப் பின்னர் வெளியிடலாம் எனக் கருதியுள்ளோம்’  எனவும் விவரிக்கிறார். புதிய உரையுடன் சங்க இலக்கியத்தைப் பதிப்பிக்கும் நோக்கத்தின் முதற்பகுதியாகவே இச்சங்க இலக்கியப் பதிப்பில் மூலம் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை,
‘பழைய வுரைகளினுடைய திட்டத்தைப் பாதுகாத்து, இக்காலத்தவர் எளிதில் அறியக்-கூடிய நடையில் எழுதப்பெறும் புத்துரையே தாங்கள் விரும்புவதென்றும் மேற்கூறிய தமிழாசிரியரும் மாணவர்களும் வற்புறுத்தி-னார்கள். பல நண்பர்களோடு இதைப்பற்றி நன்கு, ஆலோசித்ததில், இப் பெருந்தொண்டில் முதற்பகுதியாக, மூலத்தை மட்டும் செம்மையாக அச்சிடுதல், நலமென்று விளக்கமாயிற்று’ என முகவுரை தெரிவிக்கிறது. இரண்டாம் பதிப்பின் முகவுரையிலும் மு.சண்முகம்பிள்ளை இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மூலத்தை வெளியிட்டது முதற்பகுதி வேலையே என்றும் புதியவுரையன்று இவற்றுக்கு எழுதப்பட்டு அடுத்ததாக வெளியிடத் திட்டமிடப்பட்-டிருந்தது என்பதும் தெளிவாகிறது.
சங்க இலக்கியங்களில் ஒன்றாகக் கருதப்படும் திருமுருகாற்றுப்படையைக் குறித்துக் காண்ப-தற்கு முன்பு பத்துப்பாட்டு குறித்து வையாபுரிப்-பிள்ளை கொண்டிருந்த கருத்துகளைக் காணுதல் அவசியமாகிறது. அதே போல முச்சங்கம் குறித்த அவரது கருத்தை அறிதலும் அவசியமாகிறது.
‘சங்கப் புலவர்களைப் பற்றிய பழைய வரலாறுகளும் புதிய ஆராய்ச்சியும் பெரிதும் மாறுபடுகின்றன. இறையனார் அகப்பொருள் உரைப் பாயிரத்தில் முச்சங்கங்களின் வரலாறும் அவற்றுள் விளங்கிய சிறந்த புலவர்கள் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற் புராணத்திலும் உரையாசிரியர்கள் காலத்திலும் இவ்வரலாறு மெய்யென்றே எண்ணப்பட்டது. இப்போது நடைபெறும் ஆராய்ச்சியில் சங்க-மென்பது இருந்ததாகக் கூறுவதாலும் பழங்-கதையென்றும், புலவர்கள் பாடிய நூல்களின் தொகையே சங்கமென்றும் கூறப்படுகிறது. இம்மாறுபட்ட கருத்துகளின் உண்மையையிங்கே ஆராய்ந்து துணிவது எனது கருத்தன்று’ (சங்க நூற்புலவர்கள் பெயர் அகராதி:2) எனக் கூறும் வையாபுரிப்பிள்ளை சங்கம் பற்றிய கர்ண பரம்பரைச் செய்திகளை மதிப்பிடும்போது,
‘கடைச்சங்கத்தில் தெய்வங்களும் இல்லை; ரிஷிகளும் இல்லை. எனவே, இக்கடைச்சங்கம் தான் முற்றும் மக்களால் இயன்றது. இதற்கு ஏற்ப, சிறப்புகளும் சிறிது சிறிது குறைவுபட்-டுள்ளன
(தமிழ் இலக்கியத்தின் தொன்மை, வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி மி: 31) எனக் கூறுகிறார். இறையனார் அகப்-பொருள் கூறும் முச்சங்க அட்டவணையைக் குறிப்பிட்ட பின்னர், தலைச்சங்கத்தைக் குறிப்பிடும்போது அடிக்குறிப்பில்
‘சுமார் 50 ஆண்டுகட்கு முன்னர், செங்கோன்-றரைச் செலவு’ என்ற சிறு நூலொன்று உரையுடன் மதுரையில் அச்சிடப்பட்டு வெளி-வந்தது. இது ‘தாப்புலிப்பா’ என்ற யாப்பினால் (?) இயன்றதாம்! தலைச்சங்கத்துத் தோன்றிய நூலாம்! இக்கட்டுக் கதையின் பொய்ம்மை எளிதில் அறியத்தக்கதே. (மேலது)
எனக் குறிப்பிடுகிறார். மேற்கண்ட ‘இயன்றதாம்!’ ‘நூலாம்!’ போன்ற சொற்களில் வெளிப்படும் நையாண்டித்தனமே தெய்வங்களுக்-குட்பட 4,449 பேர் இச்சங்கத்தில் இருந்தனராம்! இச்சங்கம் இருந்த காலம் 4,440 ஆண்டுகளாம்’ (மேலது) என்னும்போதும் வெளிப்படுவதைக் காண முடிகிறது. மேலும் அவர்,
‘இவ்வரலாறுகளை வாசித்து நோக்கிய அள-வில் தலை இடைச் சங்கங்கள் முழுக்கற்பனை என்பது புலனாகும். எனவே இவற்றை ஆராய்ந்து உண்மை காண முயல்வது பயனற்ற செய்கை. தமிழின் தொன்மையையும் அதன் தெய்வத் தன்மையையும் வற்புறுத்துவதற்கு எழுதி வைத்த கற்பிதக் கதை என்றே இவை கொள்ளத்தக்கன. கடைச் சங்கத்தைப் பற்றிய வரலாறு அங்ஙன-மன்று. இதில் கூறிய புலவர்களில் பெரும்பாலரது செய்யுட்கள் இப்போதும் உள்ளன. இதில் ஆராய்ந்தனவாகக் கூறும் நூல்களிற் பெரும்பாலனவும் இப்போதும் அகப்படுகின்றன. ஆனால் இவ்வரலாற்றிலும் கற்பனைக் கலப்புள்ளது என்று கருத இடமுண்டு.
ஐங்குறுநூறு தொகுப்பித்தவன் யானைக்-கட்டேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை. இவனும் இவனது சமகாலத்தவனான தலையாலங்-கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் பகைவர் என்பது மூன்று புறப்பாட்டுக்களாலும் (17, 20, 22) அவற்றின் பின் குறிப்புகளாலும் விளங்குகிறது. இந்நிலையில் ஐங்குறுநூறு மதுரை மாநகரிற் கூடியதாகக் கூறும் கடைச்சங்கத்தில் ஆராயப்பட்டிராது என்பது திண்ணம். இவ்வாறே சேர அரசர்களைப் பற்றியே முழுதும் அமைந்த பதிற்றுப்பத்தும் மதுரையில் ஆராயப்பட்டது என்பது பொருந்துவதன்றாம். மேலும் எட்டுத்-தொகையைச் சேர்ந்த நூல்களுள், தொகுப்பு வரலாறுகள் கிடைப்பனவற்றுள், ஒன்றிலேனும் மதுரையில் கடைச்சங்கம் கூடித்தமிழ் ஆராய்ந்த-தாகக் காணப்படாமை ஊன்றிக் கவனிக்கத்-தக்கது.
தொகை நூற் புலவர்களுள்ளும் ஒருவரேனும் சங்கம் ஒன்று இருந்ததாகக் கூறினாரல்லர். புறநானூறு முகவுரையில் ‘இந்நூற்செய்யுட்களாற் பாடப்பட்டவர்கள் ஒரு காலத்தவரல்லர்…. ஓரிடத்தாருமல்லர். பாடியவர்களும் இவ்வாறே’ என டாக்டர் சாமிநாதையரவர்கள் எழுதி-யிருக்கிறார்கள். இது மிகவும் உண்மை என்பது தொகைநூற் பயிற்சியுடையவர் யாவரும் அறிவர். ஆனாலும், இச்சங்க வரலாற்றில் சில உண்மைகள் உள்ளன. இதன் கண் ‘நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப’ என்று காணப்படுகிறது. இந்த எண் தொகை நூற் புலவர்களின் எண்ணொடு பெரும்பாலும் ஒத்துள்ளது. கங்குல் வெள்ளத்தார், கல்பொரு சிறு நுரையார் முதலிய தொடராற் பெற்ற சுமார் 25 பெயர்களை நீக்குதல் வேண்டும். ஆசிரியர் பெயர் காணாத செய்யுட்களில், சிலவற்றை இயற்றியவர் பெயர்கள் முற்காலத்து விளங்கி-யிருக்கலாம்; இதனால் ஒரு சில பெயர்களைக் கூட்டுதல் வேண்டும். இங்ஙனம் கணக்கிட்டு நோக்கினால், இறையனார் அகப்பொருள் உரையில் கூறும் எண் ஒத்து வருதல் காணலாம். ஆனால் இப்புலவர்கள் வாழ்ந்த காலம் 1850 ஆண்டுகள் என்பது முதலியன கற்பிதங்கள் என்றே கொள்ளத்தக்கன. இவர்களது காலம் சுமார் ஒரு நூற்றாண்டின் எல்லையேயாம் என்பது எளிதில் காட்டுதல் கூடும்.  இப்புலவர்-களின் எண்ணேயன்றி, வேறு சில உண்மை-களையும் அடிப்படையாகக் கொண்டு இவ்வர-லாறு புனையப்பட்டுள்ளது. பாண்டியர்கள் தங்கள் தமிழ்மொழியின் மீது ஆறாத பேரன்பு கொண்டிருந்தனர். இதுபற்றியே ‘தமிழர் பெருமான்’, ‘முத்தொள்ளாயிரம்’, ‘தமிழ்நாடன்’ (திவாகரம்) முதலிய சிறப்புப் பெயர்கள் இவர்-களுக்கு வழங்கப்பட்டன. இவர்கள் தலைநகர-மாகிய மதுரையும் தமிழ் நிலைத்திருக்கும் இடமாகக் கருதப்பட்டது (மேலது: 32, 33).
கர்ண பரம்பரைச் செய்திகளை இதுவரை மறுத்த வையாபுரிப்பிள்ளை கடல்கோள் பற்றியதையும் மறுக்கிறார்.
தலைச்சங்க வரலாற்றை நோக்கினால் கடல்கோளில் பல நாடுகள் அழிந்தன என்று தோன்றுகிறது. இப்பேரழிவிற்குப் பொருத்த-மாவது லெமூரியாக் கண்டம் எனவொன்று அழிந்ததாகப் பூ _ தத்துவ ஆசிரியர்கள் கூறுவதே-யாகும். ஆதலால் இக்கண்டம் கடற்கீழ் ஒழிவதன் முன்பே தமிழிலக்கியம் தோன்றியதாதல் வேண்டும். லெமூரியாக் கண்டம் என்பதன் ஒரு பகுதியே தமிழகமாகும் என்று கூறுவர் நவீன ஆராய்ச்சியாளர் சிலர்.
இதனைக் கூர்ந்து ஆராய வேண்டியதில்லை. பூ_தத்துவ நூலார் அனுமானிக்கும் கடல் கோளுக்கும் தமிழ்நாட்டின் ஒரு சிறுபகுதி கடலால் அழிவு எய்தியதற்கும் யாதோர் இயைபும் இல்லை. அந்நூலார் குறிக்கும் காலம் நூற்றாண்டுகளால் அளக்கப்பெறாத மிக நீண்ட பேரூழியாம். அதனைப் பூ_தத்துவ காலம் (நிமீஷீரீக்ஷீணீஜீலீவீநீணீறீ ஜீமீக்ஷீவீஷீபீ) என்று கூறுவர். லெமூரியாக் கண்டம் அழிவுற்றதாகக் கூறும் காலத்தில் மனிதன் நிலவுலகில் தோன்றியிருந்தானா என்பதுகூடச் சந்தேகமே. இந்நவீன ஆராய்ச்சி-யாளர் கூறுவது நமது கவனத்திற்குச் சிறிதும் உரியதன்று என ஒதுக்கற் பாலதேயாகும்’. (தமிழ் இலக்கியத்தின் தொன்மை, வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி _40)
இது தவிர ராஜ, வளி (uஜீலீணீனீ ப.டி1) கூறும் நமது நாட்டினின்றும் இலங்கை பிரிந்து போவதற்குக் காரணமாயிருந்த கடல்கோளும் கதையென்று விளக்குகிறார். தேவா நூம்பிய திஸ்ஸாவின் காலத்தில் கி.மு. 306இல் நிகழ்ந்த கடல்கோள் தமிழகத்துப் பகுதியன்றையும் அழித்ததாகச் செய்தியில்லை என்றும் தெளிவாக்குகிறார். மற்றும், இலக்கியவுரைகளில் வரும் கடல்கோள் ஒரு புராணக்கதை எனவும் விளக்கிச் செல்கிறார். மேலும் பலப்பல சான்றுகளை நிறுவி,
‘மேற்கூறியவற்றை நோக்கும்போது கி.மு.300 அளவில் தமிழ் அரசுகள் மூன்றும் வடநாட்டுச் சக்கரவர்த்திகள் நட்புரிமை கொள்ளும்படி மேம்பாடுற்று இருந்தன என்பது புலப்படும். இம்மேம்பாடு கல்வி முதலியவற்றின் சார்பி-னாலே விளங்கியிருத்தல் வேண்டும். ஆகவே, கி.மு.300_க்கு முன் தமிழ் இலக்கியங்கள் தோன்றி நன்கு மதிக்கத்தக்க ஒரு நிலையை அடைந்-திருந்தன என்று நாம் ஊகிக்கலாம்’ (மேலது:50). எனக் கூறும் வையாபுரிப்பிள்ளை ஹிரோ டோட்டஸ், டோலியஸ், மெகஸ்தனிஸ், அரியன், எரட்டோஸ்தீனிஸ், ஹிப்பார்க்கஸ், ஸ்ட்ராபோ, ஹம்போல்ட் ஆகிய வரலாற்-றாசிரியர்களின் கூற்றுகளைப் பரிசீலனைக்-குட்படுத்துவதுடன் பெரிப்ளூஸ் என்ற நூலை-யும் ஆதாரமாகக் கொண்டு கீழ்வரும் முடிவுக்கு வருகிறார்:
‘பெரிப்ளூஸ் கூறுவனவற்றிலிருந்து பல அரிய செய்திகள் தமிழ் நாட்டினையும் தமிழ்நாட்டு வியாபார நிலையையும் குறித்து வெளியாகின்றன. இவர் கூறும் திண்டிஸ், முசிறி (அகம்: 57, 149; புறம்: 343) என்னும் பட்டினங்கள் சங்க நூல்களில் பல இடங்களில் காணப்படுகின்றன. திண்டிஸ் என்பது தொண்டி (நற். 8, 18, 195: குறுந். 198, 210, 238; ஐங்குறு. 171 _ 180; பதிற்.க்ஷிமி பதிகம். 88; அகம். 10, 60, 290; புறம். 17, 48. தொண்டியைப் பற்றிக் குறிப்பிடும் இந்த ஆறு நூல்களும் முற்பட்ட சங்க நூல்கள் என்பதும் கலித்தொகை பரிபாடல் என்பன பிற்பட்ட சங்க நூல்கள் என்பதும் உய்த்துணர்தல் கூடும்) யாகும். பொதுக (ஜீஷீபீuநீணீ) என்று  இவரால் குறிக்கப்பட்டது தற்காலத்தில் புதுச்சேரி என வழங்கும் பாண்டிச்சேரி என்பர். ஆனால், சங்க நூல்களால் பொதுக்கயம் (குறுந். 337) அல்லது புதுக்கயம் (நற். 294) என்ற ஊர் ஒன்று உளதாகத் தெரிகின்றது. பெரிப்ளூஸில் வருவதும் இவ்வூரி-னையே குறித்தது எனக்கொள்ளுதல் மிகப் பொருத்தம் என்று தோன்றுகிறது. மிளகு வியாபாரத்தையும் இந்நூல் குறித்துள்ளது. இவ்-வியாபாரமும் சங்க நூல்களால் வெளிப்படு-கின்றது. இவற்றையெல்லாம் நோக்குமிடத்து, சங்க நூல்களுள் மிகவும் முந்தியன இந்நூலின் காலத்தை (சுமார் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியை) அடுத்தகாலம் எனக்கொள்ளுதல் தகும் (மேலது: 60).
சங்க காலத்தை வரையறுக்க முயன்ற  வையாபுரிப்பிள்ளை பத்துப்பாட்டுகளின் காலத்-தையும் வரையறுக்கிறார். அவற்றின் அமைப்பு முறையையும் மாற்றி, அவை தோன்றிய காலத்-திற்கேற்ப ஆராய்ந்து, வருமாறு அமைக்கிறார்.
1.பொருநராற்றுப்படை, 2.பெரும்பாணாற்றுப் படை, 3. பட்டினப்பாலை, 4. குறிஞ்சிப்பாட்டு, 5. மலைபடுகடாம், 6. மதுரைக்காஞ்சி,
7. நெடுநல்வாடை, 8. முல்லைப்பாட்டு,
9. சிறுபாணாற்றுப்படை, 10.திருமுருகாற்றுப்படை.
இவற்றுள் சிறுபாணாற்றுப்படை, முதல் எட்டு நூல்களும் 2 அல்லது 3 தலைமுறைகள் பிற்பட்டுத் தோன்றியிருக்கலாம். முருகாற்றுப்-படை இவற்றிற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டு இயற்றப் பெற்றாதல் வேண்டும். ‘சங்க இலக்கியங்களின் வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு இம்முறை பெரிதும் பயன்பட வல்லது’. (பத்துப்பாட்டும் அவற்றின் கால-முறையும், வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம், தொகுதி:1 114) என்கிறார். பத்துப்பாட்டின் வைப்புமுறையை இங்கே மாற்றியமைக்கிறார். அப்படியானால் முன்பிருந்த வைப்புமுறை யாதென்பதையும் அறிதல் அவசியமாகிறது.
முருகுபொரு நாறு பாணிரண்டு முல்லை
பெருகுவள மதுரைக் காஞ்சி _ மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து
என்றும் இப்பழஞ் செய்யுள் கூறும் முறையே அது. இம்முறையைப் பின்பற்றியே உ.வே.சாமிநா-தய்யர் பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் சேர்ந்த பதிப்பை வெளியிட்டுள்ளார். பத்துப்பாட்டு பற்றிய செய்தி முதன் முதலில் மயிலை நாதருரையில் (நன்னூல் 387) தரப்பட்-டுள்ளது என்பதையும் தொல்காப்பிய உரை-யாசிரியர் இவற்றைப் ‘பாட்டு’ என்றே வழங்கினர் (செய்யுளியல் 50, 80 வரை) என்பதையும் வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுகிறார் (மேலது: 134)
இந்தப் புரிதலோடு, பத்துப்பாட்டில் உ.வே.சா. பதிப்பில் காணப்படும் முதல்நூலும் வையாபுரிப்-பிள்ளை இறுதியில் கூறியுள்ள நூலுமாகிய திருமுருகாற்றுப்படையை உதாரணமாக வைத்துக்கொண்டு வையாபுரிப்பிள்ளையின் பதிப்பு நெறிமுறையைக் காணுதல் இனி நோக்கம்.
சங்க இலக்கியப் பதிப்புக்காக மட்டுமல்லாது தனியாகவும் திருமுருகாற்றுப்படையை வையாபுரிப்பிள்ளை பதிப்பித்திருக்கிறார். 1937 இல் ‘செந்தமிழில்’ வெளியாகியுள்ள இது 1943 இல் தனிநூலாக வந்துள்ளது. பழைய உரை-யன்றைக் கொண்டதாகிய இது குறித்து வையாபுரிப்பிள்ளை,
“ ‘உரையாசிரியருரை’ என ஏட்டுப்பிரதியில் எழுதப்பெற்ற ஓருரையுளது. இதனை மதுரைத் தமிழ்ச் சங்கப் பிரசுரமாக யான் வெளியிட்-டுள்ளேன். உரையாசிரியர் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் இளம்பூரணவடிகள் இவ்-வுரையை இயற்றியவரல்லர் என்பது உரையின் நடையை நோக்கிய அளவிற் புலனாம். ஆனால் ஏட்டுப்பிரதி 994 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30 ஆம் தேதி எழுதப்பெற்றது. எனவே இன்றைக்கு 134 வருஷங்களுக்கு முன் பிரதி செய்ததாகும். எப்பொழுது இவ்வுரை வகுக்கப்பெற்றது என்பது அறியக்கூடவில்லை. இவ்வுரையும் நச்சினார்க்-கினியர் உரையும் பெரிதும் ஒத்துச் செல்கின்றன. ‘வசிந்து வாங்கு நிமிர்ந்தோள்’ 8 (106_ம் அடி) என்றதன் உரையில் ‘வளையவேண்டுமிடம் வளைந்து நிமிர வேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர்’ என நச்சினார்க்கினியர் தமக்கு முற்பட்ட உரைகாரர் ஒருவரைக் குறிப்பிடுகின்றார். ‘உரையாசிரியர்’ உரையில் இப்பொருளே காணப்படுகிற படியால் இவ்வுரை நச்சினார்க்கினியர்க்கு முந்தியது எனக் கொள்ளுதல் அமையும். உத்தேசமாக கி.பி.14 ஆம் நூற்றாண்டில் இவ்வுரை எழுதப் பெற்றதாகலாம்.
‘இது ஒரு சிறந்த பழையவுரையாகும். யாவரும் அறியக்கூடியபடி மிகவும் எளிமையான நடையில் எழுதப் பெற்றிருக்கிறது. மாட்டு முதலிய இலக்கணத்தால் அடிகளைச் சிதைத்து அலைத்துப் பொருள் பண்ணாதபடி சொற்-கிடக்கை முறையிலேயே பெரும்பாலும் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆற்றுப்படையைக் கற்போர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இவ்வுரையால் இது காறும் கருகலாயிருந்த ஓர் அரிய தொடருக்கு இப்போது பொருள் விளங்குகிறது. 216ஆம் அடியிலுள்ள ‘தலைத்-தந்து’ என்பதற்கு ‘முதற்கை கொடுத்து’ என நச்சினார்க்கினியர் எழுதினார். புறநானூறு 24ஆம் செய்யுளில் ‘தலைக்கை தரூஉந்து’ என்பதற்கு அதன் பழைய உரைகாரர் ‘முதற்கை கொடுக்கும்’ என்றெழுதினார். 73ஆம் கலியுள் ‘துணங்கையும் கலைகொள்ள’ என்பதற்குத் துணங்கைக் கூத்திடத்தே… தலைக்கை கைகுத்தற்றொழிலை…. கொள்கையினாலே’ என நச்சினார்க்கினியர் விளக்கினார். ஆனால் தலைக்கை கொடுத்தல் அல்லது முதற்கை கொடுத்தல் என்பதன் பொருள் இதுகாறும் விளங்கியபாடில்லை. இவ்வுரைகாரர் ‘அவர்கள் ‘மகளிர்’ களவறிந்து  அவர்கட்கு இருப்பிடங்கொடுத்து’ என்றெழுது-கிறார். இவ்வுரை பழைய வழக்காற்றினை-யுணர்ந்து எழுதியதாகத் தோன்றுகிறது. பொருளும் விளங்குகின்றது’. (‘திருமுருகாற்றுப்படை’, வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம். தொகுதி மி: 164 _ 165) எனக் கூறுகிறார். அடுத்து வையாபுரிப்-பிள்ளையே ஒரு புதிய உரையை எழுதி மூலத்துடன் பதிப்பித்துள்ளார்.
இது சைவ சித்தாந்த மகா சமாஜ வெளியீடாக 1.4.1933 இல் வெளிவந்துள்ளது. அடுத்த பதிப்பு அடுத்த ஆண்டே வெளியிடப்பட்டுள்ளது. முதற்பதிப்பின் முன்னுரையில் ம. பாலசுப்பிர-மணியன்,
‘இவ்வுரையை எளிய தமிழ் நடையில் நமக்கு எழுதியுதவிய பெரியார் திரு.எஸ்.வையாபுரிப் பிள்ளை, பி.ஏ., பி.எல். அவர்களாவார்’ எனக் குறிப்பிட்டிருப்பதன் மூலம் வையாபுரிப்பிள்ளை திருமுருகாற்றுப்படைக்கு உரையெழுதியிருப்பது உறுதியாகிறது.
இப்புதியவுரையுடன் கூடிய திருமுருகாற்றுப்-படை சமாஜ வெளியீடான பதினோராம் திருமுறையிலும் (28.5.1933) இடம்பெற்றுள்ளது. வையாபுரிப்பிள்ளை இதற்குப் புதிய உரை எழுதியதை அங்கும் குறிப்பிட்டு நன்றி சொல்லப்-பட்டிருக்கிறது. சைவ சித்தாந்தப் பெருமன்றம் வெளியிட்டுள்ள ‘முருகன் முந்நூல்’ (1984) என்னும் நூலிலும் முதல்நூலாக வையாபுரிப்-பிள்ளையின் உரையுடன் திருமுருகாற்றுப்படை இடம் பெற்றுள்ளது.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்
சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்
(தொல். புறத். 36)
என்று ஆற்றுப்படை நூலுக்குத் தொல்காப்-பியம் கூறும் இலக்கணம் அரசர் முதலியோ-ரிடத்து ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் திருமுருகாற்றுப்படையோ புதிய நெறியில் முருகனிடம்  வீடுபேறு அடைய விரும்பியவனை ஆற்றுப்படுத்துவதாக அமைந்-துள்ளது.
‘பிற ஆற்றுப்படைகளெல்லாம் ஆற்றுப்படுக்-கப் பட்டாராற் பெயர் பெறுதலும், அந்நெறிக்கு மாறாக முருகாற்றுப் படையன்றே பாட்டுடைத் தலைவனாற் பெயர் பெறுதலும் மனங்கொள்ளத்தக்கன. புலவராற்றுப் படை-யென்ற பெயரால் நூல் முதலிய சமயப் பொருள் விளங்கமாட்டாது போகவே, அப்பொருள் எளிதில் விளங்குமாறு பாட்டுடைத் தெய்வத்தின் பெயரொடு சார்த்தி இந்நூல் வழங்கலாயிற் றென்பதே உண்மையெனத் தோன்றுகிறது. இப்புதுவழக்குப் பரவிவிட்ட காரணத்தினால் பழையதாகிய புலவராற்றுப்படையென்ற பெயர் வழக்கு வீழ்ந்ததாதல் வேண்டும். (‘திருமுருகாற்றுப்-படை’, வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் தொகுதி மி: 144)
என வையாபுரிப்பிள்ளை விளக்கிச் செல்-கிறார். உ.வே.சாமிநாதையர் பிற ஆற்றுப்படை-களுக்கும் இதற்குமுள்ள வேறுபாடுகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்.
‘பிற ஆற்றுப்படைகள் ஆற்றுப்படுத்தப்-படுபவர்களது பெயரோடு சார்த்தி வழங்கப்படும்; இது பாட்டுடைத் தலைவன் பெயரொடு சார்ந்து வழங்கும். பிறவற்றிற் காணப்படுவனவாகிய, ஆற்றுப்படுத்தப்படுவானை விளித்தலும், அவனது நிலையை விரித்தலும், ஆற்றுப்படுத்துவான் தனது பழைய நிலை, பரிசில் பெற்ற முறையென்-பவற்றைக் காணுதலும் இதில் விளக்கப்படாமல் உய்த்துணர வைக்கப்படுகின்றன’ (பத்துப்பாட்டு பதிப்பின் முகவுரை: 5)
‘முருகு’ எனவும் ‘புலவராற்றுப்படை’ எனவும் வழங்கப்படும் திருமுருகாற்றுப்படை 317 அடிகள் கொண்ட ஆசிரியப்பாவால் இயன்றுள்ளது. மலைக்குகை ஒன்றிலே 999 பேரோடு நக்கீரரும் பூதம் ஒன்றினால் உண்ணப்படுவதற்காக அடைக்கப்பட்டாராம். குகையிலே மற்றவர்கள் இவரைக் கண்டு இறைஞ்சவே பூதத்தை வெல்லக் கருதி கடவுளைக் குறித்து இந்நூலைப் பாடி பூதத்தினின்று மற்றவர்களோடு விடுதலை பெற்றாராக எனவரும் கதை குறித்த செய்திகள் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், திருப்பரங்குன்றப் புராணம், சீகாளத்திப்புராணம் முதலியவற்றில் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. நூலெழுந்த வரலாறு இப்படியாயிருக்கிறது.
‘இவ் வரலாறு சில வேறுபாடுகளுடன் முதன் முதலாகத் திருவாலவாயுடையார் திருவிளை-யாடற் புராணத்தில் இந்திரன் முடிமேல் வளையெறிந்த திருவளையாடலிற் காணப்-படுகிறது (44, 23 _28) “குன்ற மெறிந்தாய் குரை கட லிற்சூர் தடிந்தாய்’’ என்று வரும் வெண்-பாவும் நக்கீரர் இயற்றியதாகவே இத்திருவிளை-யாடல் கூறும். ஆனால் ஒரு விஷயம் இங்கே கவனிக்கத்தக்கது. இவ்வரலாற்றுக்குரிய செய்யுட்கள் சில பிரதிகளில் இல்லை. எனவே, இவை பிற்காலத் தொருவராற் சேர்க்கப் பெற்றன-வென்று கருதுதற்கு இடமுண்டு. இந்திரன் முடிமேல் வளையெறிந்த சரித்திரத்திற்கும் நக்கீரர் செயலுக்கும் யாதோர் இயைபுமில்லாமையும், இச்செய்யுட்களை நீக்கியவிடத்துக் கதை செவ்வனே நிகழுமாறும் ஈண்டு நோக்கத்தக்கன. அருணகிரிநாதர் “கிரனுக்குகந்து…. உலக முவப்ப வென்றுனருளா லளிக்குகந்த பெரியோருடனே’’ (திருப்புகழ், சமாஜப்பதிப்பு, செய்.352) எனவும், “மலைமுகஞ்சுமந்த புலவர் செஞ்சொல் கொண்டு வழிதிறந்த செங்கை வடிவேலா’’ (திருப்புகழ், 1201) எனவும் கூறுதலிலே முருகாற்றுப் படையியற்றிய நக்கீரர் வரலாற்றைச் சிறிது காணலாம்.
திருப்புகழாசிரியர் காலம் 15ஆம் நூற்றாண்-டாகும். திருவாலவாயுடையார் திருவிளையாடற்-புராணம் 13ஆம் நூற்றாண்டிற்கு முன்பு இயற்றியதாகலாம் என அந்நூலைப் பதிப்பித்த டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் கருதினர். இக்கால வரையறை கொள்ளத்தக்கதன்றெனவும் 16ஆம் நூற்றாண்டுக்கே அந்நூல் உரியதெனவும் ஓர் ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளார். இவர் கூறுவனவே ஒப்புக்கொள்ளத்தக்கன. எவ்வாறு நோக்கினும் 13ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்களில் முருகாற்றுப்படை வரலாறு காணப் பெறவில்லை. எனவே, இவ்வரலாறு 13ஆம் நூற்றாண்டு முதல் கர்ண பரம்பரையாய் வழங்கத் தொடங்கியதெனக் கொள்ளலாம்’.
(‘திருமுருகாற்றுப்படை’ வையாபுரிப்பிள்ளை நூற்களஞ்சியம் தொகுதி மி: 145, 146)
எனக்கூறும் வையாபுரிப்பிள்ளை, நக்கீரர் பற்றி எழுந்த பலவிதமான செய்திகளைப் பற்றிக் குறிப்பிட்டு
‘இவ்வரலாறுகளெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு நோக்கங்களுடன் தோன்றி நக்கீரரது பெருமையையும் புகழையும் வளர்ப்பனவாயின. இவற்றுள் ஒன்றேனும் அவரது உண்மைச் சரிதத்தோடு தொடர்புடைய-தெனக் கொள்ளுதற்கில்லை’ (மேலது:149) என அறவே நீக்கிவிடுகிறார்.